News August 15, 2024
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 21, 2025
தஞ்சாவூர்: கிரைண்டர் வாங்க பணம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !
News December 21, 2025
தஞ்சை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நகரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (டிச.23) நடைபெற உள்ளது. இக்கூட்டமானது தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பி.சித்ரா தலைமையில், நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News December 21, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


