News September 14, 2024
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பிரபல ரவுடி கைது

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரை அறிவாளால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர் நித்திஷிடம், ரவுடி பென்னி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நித்திஷை, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு ரவுடி பென்னி தப்பி தலைமாறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பென்னியை மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
SIR – திமுக சார்பில் வார் ரூம் அமைப்பு

சென்னையில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சந்தேகங்களை தீர்க்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை விட திமுக தான் அதிக களப்பணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் 8065420020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
News November 9, 2025
சென்னையில் சீருடை பணியாளர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான பொது தேர்வு இன்று எழுத்து தேர்வாக நடைபெற்றது. சென்னையில்10 மையங்களில் 1,772 பெண்கள் உட்பட 8,090 பேர் தேர்வு எழுதியனர். கமிஷனர் அருண் தலைமையில், துணை மற்றும் உதவி ஆணையாளர்கள், பறக்கும் படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வு அமைதியாக நடைபெற்றது.
News November 9, 2025
சென்னை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக*


