News October 13, 2024

சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மயங்கி விழுந்து பலி

image

கடம்பத்தூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் இவர் வேப்பம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 9-ந் தேதியன்று மயங்கி கீழே விழுந்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில் இரத்த அழுத்ததாள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

Similar News

News November 20, 2024

திருவள்ளூர் அருகே பரோட்டா மாஸ்டருக்கு வெட்டு

image

திருவள்ளூர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38).பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடைக்கு எதிரே டிபன் கடை இருக்கிறது.கடந்த 17-ம் தேதி பால்ராஜ் உறங்கி கொண்டிருந்த போது டிபன் கடை உரிமையாளரின் மகன் தனுஷ், பால்ராஜின் அறை கதவை தட்டினார்.கதவை திறந்தவுடன் தனுஷ் கத்தியால் பால்ராஜ் கழுத்தில் குத்தினார்.இதில் பால்ராஜ் படுகாயமடைந்தார்.புகாரின் பேரில் போலீசார் நேற்று தனுஷை கைது செய்தனர்.

News November 20, 2024

திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலக வளாகத்தில் வரும் நவ.22ம் தேதி காலை10 மணி யளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News November 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.