News February 15, 2025
சுகாதார துறையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பல் மருத்துவர், ‘டேட்டா’ மேலாளர், லேப் உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பங்களை tiruvallur.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளுடன் பிப்ரவரி 28க்குள் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
திருவள்ளூரில் இன்று ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (8.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News November 8, 2025
திருவள்ளூர்: பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
திருவள்ளூர்: குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி சோழியம்பாக்கத்தை சேர்ந்த சேது-சங்கீதா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷினி. இன்று காலை குழந்தை தர்ஷினி வீட்டில் யாரும் கவனிக்காத போது அருகில் இருந்த குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


