News February 16, 2025

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு – 7 பணியிடங்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள செவிலியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். செவிலியர்கள் 5 காலியிடம், (MPHW) 2 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. ஷேர் செய்யவும்.

Similar News

News December 12, 2025

தி.மலைக்கு வந்த நடிகை ஆண்ட்ரியா

image

திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோயிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயியில் (டிச.11) நேற்று நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News December 12, 2025

தி.மலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

தி.மலை, அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.3ம் தேதி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த உள்ளுர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை டிச.13ம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே நாளை பள்ளிகள் இயங்கும்.

News December 12, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று இரவு – இன்று (டிச:12) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!