News February 17, 2025

சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

image

கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் கொந்தமூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், 20 சீல் வைக்காத சாராய பாக்கெட்டுகள், அரை லிட்டர் சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அர்ஜுனன் மற்றும் ஆனந்த், வின்சென்ட் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News October 15, 2025

விழுப்புரம்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

விழுப்புரம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 15, 2025

விழுப்புரம்: பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே, மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்க.

error: Content is protected !!