News May 7, 2025
சீர்காழி: மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை, சீர்காழியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை அவரது கணவர் பூராசாமி குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பூராசாமிக்கு ஐந்தாயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார். இதை தொடர்ந்து பூராசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News December 6, 2025
மயிலாடுதுறை: தகராறில் காய்கறி கடை உரிமையாளர் பலி

சீர்காழி, திருப்புன்கூர் மெயின்ரோட்டில் ராஜா (52) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கடைக்கு காய்கறி வாங்க வந்த மானந்திருவாசலை சேர்ந்த சந்திரசேகர்( 49) என்பவருக்கும், ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ராஜா பலத்த காயம் ஏற்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
News December 6, 2025
மயிலாடுதுறை: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

மயிலாடுதுறை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிற்க வேண்டாம். வீட்டில் இருந்தே மாற்றும் வழியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!
News December 6, 2025
மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தமிழக முதல்வர் சென்னையில் இன்று தாயுமானவர் திட்டம் கல்வி சுய தொழில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இன்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கல்வி சுயதொழில் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


