News October 23, 2024

சீர்காழி சிறுவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

image

சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் மாவீரன் (9) சக்தி(9) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இன்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 21, 2025

மயிலாடுதுறை: ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெரும் பணி நடந்து வருகிறது. அனைத்து படிவங்களும் திரும்ப பெறப்பட்டு தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உரிய முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

மயிலாடுதுறை: கொட்டி கிடக்கும் அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News November 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தின் மழை அளவு விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை முதல் மழை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு இடங்களில் மதியத்திற்கு மேல் கனமழை பெய்தது. அந்தவகையில் நேற்று காலை முதல் மாலை 4:30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 20 மி.மீ, செம்பனார்கோவிலில் 6.20 மிமீ, தரங்கம்பாடியில் 2.20 மிமீ, கொள்ளிடத்தில் 1.60 மிமீ என மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!