News January 10, 2025
சீமான் மீது வழக்குப் பதிவு
திருப்பத்தூர் திராவிட கழகம் மாவட்ட செயலாளர் கலைவாணன் இன்று நள்ளிரவு போலீஸுல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 8ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூர் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பெரியார் குறித்து தரக்குறைவாக பேசியதாக யூடியூபில் வீடியோ வெளியானது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 10, 2025
தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த தொழில் முனைவோர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ சமூக மேம்பாட்டு திட்டம் மூலம் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது 3.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்தார்.
News January 10, 2025
பொங்கலுக்கு புடவை வாங்கி தராததால் மனைவி தற்கொலை
ஏலகிரி மலை கிராமத்தை சேர்ந்த நந்தினி மற்றும் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நந்தினி பொங்கலுக்கு புதிய புடவை வாங்கி தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். இதனை அவர் மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாய் வீட்டில் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவரும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 10, 2025
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத்தர ஏற்பாடு செய்து தரப்படும். பயிற்சியில் சேர தாட்கோ இணைய தளத்தைக் காணலாம் என்றும் அறிவித்துள்ளார்.