News January 9, 2025

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.க சார்பில் மனு

image

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் தந்தை பெரியாரை பற்றி சீமான் தவறாக பேசி வருகிறார் என்றும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாவட்டத் தலைவர் சுருளி ராஜ், மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் தி.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News December 11, 2025

தேனி: நாய் குறுக்கே புகுந்து இளைஞர் பலி

image

போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் நேற்று (டிச.10) அப்பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே புகுந்ததால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

News December 11, 2025

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

தமிழ்நாடு அரசு 1995ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பணிபுரிந்தவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற https://theni.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக 18.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

தேனி: இந்தியன் ஆயிலில் 2757 காலியிடங்கள்., NO EXAM

image

தேனி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இதற்கு தேர்வும், விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!