News April 14, 2024

சீமான் தீவிர பிரச்சாரம்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, துறையூர், நம்பர்1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் (மைக்) ஒலிவாங்கி சின்னத்திற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் பெரம்பலூர் நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்து கொண்டனர். 

Similar News

News December 7, 2025

பெரம்பலூர்: காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 13 இரு சக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 16 வாகனங்கள். வரும் (12.12.2025) அன்று மாவட்ட ஆயுத படை வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. வாகனம் வாங்குவோர் வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ₹500 செலுத்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

பெரம்பலூர்: நாய் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராம சுற்றுவட்டாரத்தில் வனத்துறை பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று உணவு தேடி ஊருக்குள் வந்த ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்துக் குதறியது. மேலும் இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புள்ளிமானை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில்லையே உயிரிழந்தது. இந்நிலையில் கால்நடை மருத்துவர் கொடுத்த தகவலின் படி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

பெரம்பலூர்: பெண்கள் தொழில் முனைவோருக்கு கடன் உதவி

image

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி அறிவித்துள்ளார். தமிழக அரசின் இத்திட்டத்தின் கீழ், பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை 25% மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். மேலும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகளும் அளிக்கப்படும்.

error: Content is protected !!