News August 14, 2024
சீமான், சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Similar News
News November 17, 2025
திருச்சி: ரயிலில் இருந்து கீழே விழுந்து பலி

தஞ்சையில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு திருவெறும்பூா் ரயில் நிலையத்தை கடந்துசென்றது. அப்போது, திருவெறும்பூா் அருகே ரயில் படியின் அருகே நின்று பயணித்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
திருச்சியில் குற்றங்கள் அதிகரிப்பு!

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குற்ற வழக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் & பெண்களுக்கு எதிராக திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ‘806’ குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது!
News November 16, 2025
திருச்சி: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


