News January 22, 2025

சீமான் கொடும்பாவி எரிக்கப்படும்-மதிமுக எச்சரிக்கை

image

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான இராம உதயசூரியன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெரியார் குறித்த விமர்சனங்களை சீமான் நிறுத்தாவிட்டால், மதிமுக தலைமை அனுமதியோடு தென்காசி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சீமான் கொடும்பாவி எரிக்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்

Similar News

News December 13, 2025

தென்காசி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

தென்காசி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!

News December 13, 2025

தென்காசி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் (9445000478, 9342595660) புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News December 13, 2025

தென்காசி: மதுபோதையால் தீ விபத்து.. தொழிலாளி பலி

image

திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர் சில தினங்களுக்கு முன் மது போதையில் வீட்டில் கேஸ் அடுப்பு பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது வேட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!