News September 13, 2024
சீத்தாராம் யெச்சூரிக்கு மலர் தூவி மரியாதை

சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தி.நகரிலுள்ள சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் செப். 13-14 என இரண்டு நாட்கள் சீத்தாராம் யெச்சூரியின் உருவப்படம் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது படத்திற்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Similar News
News November 21, 2025
மாட்டுக்கு பாலியல் ரீதியாக தொல்லை!

பல்லாவரம் அருகே பசுமாட்டை மர்ம நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வீடியோவாக எடுத்து பெண் ஒருவர் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அனுப்பிய நிலையில், விலங்கு நல ஆர்வலர் நடத்திய ஆய்வில் அந்த நபர் மாட்டிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News November 21, 2025
கிறிஸ்துமஸ்க்குள் மல்டி ஆக்சில் பேருந்துகளை இயக்க திட்டம்

அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஒன்றாக 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மல்டி ஆக்சில் பேருந்துகளை விரைந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 20ம் தேதிக்குள் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
News November 21, 2025
சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் பரபரப்பு புகார்!

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது


