News September 12, 2024
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட குழு சார்பாக, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாளை(செப்.,13) மாலை 5 மணிக்கு பாளை., LIC அலுவலகம் முன்பிருந்து இரங்கல் ஊர்வலம் தொடங்கி லூர்து நாதன் சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று நெல்லை கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Similar News
News October 29, 2025
நெல்லை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு நவம்பர் 22 ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ் காதி மணி வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாலை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆண்கள் 60 பேர், பெண்கள் ஐந்து பேர் என 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளன என அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News October 29, 2025
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 143/64.96%, மணிமுத்தாறு அணை 118/70.72%, சேர்வலாறு அணை 156/57.68%, வடக்கு பச்சையாறு அணை 49.20/ 4.68%, நம்பியார் அணை 22.96/21.21%, கொடுமுடியாறு அணை 52.50/88.25% ஆகா உள்ளது. சில அணைகளில் மட்டும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.


