News August 3, 2024
சிவாஜி மன்னர் பாராட்டிய செஞ்சி கோட்டை

இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.
Similar News
News September 16, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.15 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
வக்ஃபு திருத்தச் சட்டம்: தீர்ப்பை வரவேற்ற விழுப்புரம் எம்பி!

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார்.