News December 31, 2024
சிவகிரியில் இரவில் வீடு புகுந்து கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் ராமேசுவரன். இவரது மனைவி பாஞ்சாலி 2 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு பாஞ்சாலி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஞ்சாலியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.சம்பவ இடத்திலே பாஞ்சாலி உயிரிழந்தார். சற்று நேரத்திலே போலீசார் குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
Similar News
News November 16, 2025
தென்காசி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 16, 2025
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தென்காசி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 16, 2025
தென்காசி: ரயில் மோதி உயிரிழந்த நபர்

தென்காசி மாவட்டம் இலஞ்சி குத்துக்கல்வலசை செல்லும் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே இன்று (நவ. 16) அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி விபத்தில் உயிர் இழந்துள்ளார். தற்போது காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அடையாளம் தெரிந்தவர்கள் தென்காசி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.


