News April 26, 2025
சிவகாசி: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2021 முதல் 2025 வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கவிதா பாண்டியராஜன். இந்த ஊராட்சியில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவை நிதியை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறி யூனியன் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 27, 2025
பாலியல் துன்புறுத்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று பாலின சமத்துவம், பெண்களின் அதிகாரம் அளித்தல் மற்றும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
News April 26, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக போட்டிகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே.9 அன்று அனைத்து பள்ளி 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மே.10 அன்று கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்று tamilvalar.vnr@tn.gov.in இல் மே.5 க்குள் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக ரூ.10000 வழங்கப்படும்.
News April 26, 2025
பட்டாசு ஆலை விபத்துக்கு முற்றுப்புள்ள எப்போது? – டிடிவி

சிவகாசி பட்டாசு விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.