News February 17, 2025
சிவகாசி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே நுகர்வோர்கள் மின்வாரியப் பணிகள் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து, தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என சிவகாசி மின் பகிர்மான தலைமை பொறியாளர் பத்மா தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் 31.07.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான 4562-290953, 94990-55823, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News July 6, 2025
பட்டாசு வெடி விபத்து ஒரு சாபக்கேடு – பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் ஆலையின் உரிமம் ரத்து என்பது கண் துடைப்பாக இல்லாமல் இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் சட்டம், அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்து விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
BREAKING சாத்தூர் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்அனர். இந்நிலையில் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.