News March 29, 2025

சிவகாசியில் 299 கண்காணிப்பு கேமராக்கள்

image

சிவகாசியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக போலீசார் சார்பில் நகரில் முக்கிய இடங்களில் 299 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிப்பதுடன், பழைய குற்றவாளிகளை அடையாளம் காணுதல், கண்காணிப்பு பணியை எளிதாக்க முடியும். இதேபோல் காரியாபட்டியில் 35, அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

Similar News

News April 6, 2025

இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி

image

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பிரபாகரன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News April 5, 2025

ஆட்சியர் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News April 5, 2025

சதுரகிரியில் மலையேற பக்தர்களுக்கு தடை

image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.

error: Content is protected !!