News April 18, 2025
சிவகங்கை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <
Similar News
News December 13, 2025
சிவகங்கை மாவட்ட மக்களே., இன்று விரைவில் தீர்வு!

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிபதியுமான அறிவொளி நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (டிச.13) 11 அமா்வுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
News December 13, 2025
சிவகங்கை: பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்.!

கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி, மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வந்த திருடர்கள் சமையல் அறையில், சத்துணவு முட்டைகளை, கேஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்டு விட்டு கணினி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


