News April 13, 2025

சிவகங்கை: மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!

Similar News

News April 18, 2025

பரியாமருதுபட்டி நந்தீஸ்வரர் வரலாறு தெரியுமா?

image

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருதுபட்டி நந்தீஸ்வர கோயில். இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கட்டப்பட்டது. மகாபாரதப் போரில் காயமடைந்த பாண்டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளி காயங்களின் மேல் பூச, உடனே ஆறியதாக குறிப்புகள் உண்டு. இங்குள்ள நெய் நந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. Share It.

News April 18, 2025

கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 21 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அதில் தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 7401703503 மற்றும் அலுவலக எண் 04575 299293 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின் தொழில் நுட்ப வல்லுனர் (Electrical Technician) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

error: Content is protected !!