News April 14, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

image

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News April 16, 2025

சிவகங்கை: கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

image

சிவகங்கை மக்களே கொளுத்தும் கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, டீ அடிக்கடி குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ‘பாஸ்ட் புட்’ உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவையெல்லாம் உடல் வெப்பத்தை உண்டாக்கி உடலுக்கு கேடு விளைவிக்கும். *SHARE !!

News April 16, 2025

மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி

image

 காரைக்குடி ‘சிக்ரியில்’ மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி மே 13 முதல் 17 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ‛https://jigyasa-csir.in/ என்ற இணையதளத்தில் ஏப். 28 முதல் மே 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே காரைக்குடியில் ‘சிக்ரியில்’ பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

error: Content is protected !!