News April 21, 2025
சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

சிவகங்கை: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை.12 அன்று தேவகோட்டை, இராம்நகர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட கலெக்டர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 11, 2025
12ம் தேதி தேவகோட்டையில் சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக்க 12.07.2025 (சனிக்கிழமை) அன்று தேவகோட்டை, இராம்நகர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 10, 2025
சிவகங்கையில் நாளை மதுபான கடைகள் மூடல்

சிவகங்கை நகரில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் நாளை (ஜூலை.11) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு நாளை ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.