News August 8, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

சிவகங்கை: விவசாயிகள் நில விவர பதிவு நீட்டிப்பு

image

விவசாயிகளின் நில உடைமை விவர பதிவு செய்யும் காலக்கெடு ஏப்ரல்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் சுந்தர மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு திட்டங்களின் நன்மைகளை பெறும் போது, விவசாயிகள் ஒவ்வொரு முறையும் தங்களது நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

image

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் நாளை (நவ.8) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

சிவகங்கை: மூதாட்டி தலையை கடித்து குதறிய நாய்

image

நெல்முடிக்கரையை சேர்ந்த சுந்தராம்பாள் என்பவர் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார். அப்போது தெரு நாய் ஒன்று வீட்டுக்குள் சென்று அவரை கடித்து குதறியுள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தெருநாயை விரட்டி மூதாட்டியை திருப்புவனம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் தற்போது அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மட்டும் சிவகங்கையில் 7 பேரை தெருநாய் கடித்துள்ளது.

error: Content is protected !!