News September 14, 2024
சிவகங்கை மாவட்டத்தில் பிரசவ கால பெண்கள் இறப்பு விகிதம்

சிவகங்கையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024-2025ம் ஆண்டில் இதுவரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதே நேரம் 2022-2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
சிவகங்கை: புதிய வாக்காளரா நீங்க.? இங்க பதிவு பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்தில் 01.01.2026 ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியாக உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது<
News November 23, 2025
சிவகங்கை: பெண்ணின் வீட்டில் புது மாப்பிள்ளை தற்கொலை

சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியைச் சேர்ந்தவர் நவீன் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதன் பின்பு நவின் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பெண்ணின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நவீன் தாயார் வசந்தி புகாரளித்ததன் பேரில் நகர் போலீசார் விசாரனை நடத்தினர்.
News November 23, 2025
சிவகங்கை: 5 பேரை விரட்டிக் கடித்த வெறிநாய்..!

இளையான்குடியில் சந்தைக்கு சென்ற இளையான்குடியைச் சேர்ந்த முகமதுசேக் (38), ஜாகிராபானு (47), சேக்தாவூது (48), முகமதுரபீக் (12), ஊர்வலசையைச் சேர்ந்த சிங்கபாண்டி (29) ஆகிய 5 பேரை வெறிநாய் விரட்டி கடித்தது. காயமடைந்த அனைவரும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறிநாய் கடித்ததால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.


