News June 28, 2024
சிவகங்கை: மாதம் ரூ.1000/- பெற விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயின்று, மேற்படிப்பு பயில செல்லும் மாணவிகளுக்கு, இடைநிறுத்தமின்றி படிப்பு முடிக்கும்வரை மாதம் ரூ.1000/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், +2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு பயிலும்போது மாதம் ரூ.1000/- பெற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
சிவகங்கை: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️சிவகங்கை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 13, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (13.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
News September 13, 2025
சிவகங்கை: AI தொழில் நுட்பம் மூலம் இறந்த யானையின் சிலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுப்புலெட்சுமி என்ற யானை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ந் தேதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டது. அதற்கு நினைவாக குன்றக்குடியில் சிலை அமைக்க இன்று, செப்டம்பர் 13, பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், யானையின் AI தொழில் நுட்ப சிலை வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.