News May 15, 2024
சிவகங்கை மழைப்பொழிவு விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவகோட்டை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
BREAKING சிவகங்கையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதிமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டம், சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது வரை மாநகராட்சி அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
சிவகங்கைக்கு IMD கொடுத்த அலர்ட்…!

வங்கக்கடலில் நிலவி வரும் ‘டித்வா’ புயல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT


