News May 17, 2024

சிவகங்கை: மழைக்கு வாய்ப்பு!

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சிவகங்கையில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 16, 2025

சிவகங்கை: தீபாவளி சிறப்பு ரயில்..BOOK பண்ணிக்கோங்க.!

image

சிவகங்கை, ரயில் எண் 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, செப்டம்பர் 23, 27, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு மாற்று பாதையாக மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும். எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் மேற்கண்ட 3 தேதிகளில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான விரைவில் முன்பதிவு தொடங்குகிறது.

News September 16, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் தொடர்பு எண்கள்.

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (15.09.25)  இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம்,  அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம். என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News September 15, 2025

சிவகங்கை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த<> லிங்கை கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இணையத்தளத்தில் பார்க்கலாம். இந்த தகவலை உங்க FRIENDS க்கு SHARE பண்ணி உதவுங்க..!

error: Content is protected !!