News April 3, 2025
சிவகங்கை மக்களே தயாராக இருங்க சென்னைக்கு புதிய ரயில்

சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இரண்டு தினசரி ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக சென்னைக்கு ஒரு புதிய இரவு இரயில் சேவை அறிமுகமாகிறது. பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வண்டி எண்: 16103/16104 தாம்பரம்-இராமேஸ்வரம் சேவையை இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.இந்த ரயில் சிவகங்கை வழி செல்லும். மக்களே உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.
Similar News
News November 17, 2025
காளையார்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

காளையார்கோவில் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள கன்மாயில் உறவினர்கள் மீன் பிடித்து வருவதாக சொல்லி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பருத்திக்கன்மாய் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 17, 2025
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Project Associate, Project Assistant பணியிடங்களுக்கு மொத்தமாக 24 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD, படித்திருக்க வேண்டும்.மாத சம்பளம் ரூ.78,000 வரை வழங்கப்படும். இங்கே <
News November 17, 2025
சிவகங்கை:வட்டாட்சியரை கடித்த நாய்; பறந்த நோட்டீஸ்.!

சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், தேர்தல் வட்டாட்சியர் மேசியதாஸ் நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வெறிநாய் அவரது காலை கடித்து குதறியது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி சிவகங்கை தெருக்களில் ஆய்வு செய்தபோது சில இடங்களில் குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்துவதை பார்த்து நகராட்சி ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.


