News April 12, 2025
சிவகங்கை: பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும் கோயில்

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*
Similar News
News July 11, 2025
12ம் தேதி தேவகோட்டையில் சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக்க 12.07.2025 (சனிக்கிழமை) அன்று தேவகோட்டை, இராம்நகர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 10, 2025
சிவகங்கையில் நாளை மதுபான கடைகள் மூடல்

சிவகங்கை நகரில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் நாளை (ஜூலை.11) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு நாளை ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
சிவகங்கை: அரசு பள்ளிகளில் 1996 காலிப்பணியிடம்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த <