News April 6, 2025
சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.
Similar News
News October 14, 2025
சிவகங்கை: 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, மதுரை, ராம்நாடு, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சிவகங்கையில் இன்று (அக் 14) முதல் அக். 18 (சனி) வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
மானாமதுரை, காரைக்குடி வழியாக மும்பை எக்ஸ்பிரஸ்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் அக்-16, 17, 18 மற்றும் 22ம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, வழியாக இயக்கப்படும். அதுபோல நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் அக்-23 மற்றும் 26ம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News October 14, 2025
மானாமதுரை அடையாளம் தெரியாத நபர் விபத்தில் பலி

மானாமதுரை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் TN63BM5965 டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.