News September 13, 2024

சிவகங்கை: குரூப் 2 தேர்வை நாளை 13,260 பேர் எழுதுகின்றனர்

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

சிவகங்கை: உங்க வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

சிவகங்கை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News March 12, 2026

சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

image

சிவகங்கை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பா.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு வயது 65. இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பா.மனோகரனின் சகோதரர் ஆவர். தற்போது மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் போட்டியிட பல்வேறு நபர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

News March 12, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (11.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!