News April 2, 2025
சிவகங்கை : கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

19 வயதுக்குட்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு சனிக்கிழமை (ஏப்ரல்.5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷூ, அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 9865615649 -இல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
Similar News
News October 15, 2025
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நேற்று காலையிலிருந்து பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதில் சிவகங்கை 26.60 மில்லி மீட்டர், காரைக்குடி 50.00மில்லி மீட்டர், காளையார் கோவில் 34.50 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மலை விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமைந்தது என விவசாயிகள் தகவல்.
News October 15, 2025
காரைக்குடி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா. இரவி ஆகியோர் உடனிருந்தனர்
News October 15, 2025
சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <