News August 2, 2024
சிவகங்கை ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcp.org.in/eduins/login.aspx என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் நவ.01ம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் வருகின்ற 28.02.2026 ஆம் தேதிக்குள் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி பயன்பெறலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
தென்னை மரங்களுக்குக் காப்பீடு – ஆட்சியர் தகவல்

சிவகங்கையில் சுமார் 9127 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பயன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இந்த இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் தங்களுடைய தென்னை மரங்களுக்குக் காப்பீடு செய்து பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு வட்டாரத் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News December 15, 2025
சிவகங்கை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

சிவகங்கை மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பரிவர்த்தனைகள் பற்றி தெரிஞ்சுக்க இனி அடிக்கடி வங்கிக்கோ (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank: 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகளை தெரிஞ்சுக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


