News September 27, 2024

சிவகங்கையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

image

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சிவகங்கை நகராட்சி சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தினம் (செப்-28) முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை சிவகங்கை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் துவக்கி வைக்க உள்ளார்.

Similar News

News December 18, 2025

சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்னான +91-9013151515-ஐ SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 18, 2025

சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததால் விபத்து.. பரிதாப பலி!

image

வேலுந்தான் வயல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலுச்சாமி சம்பவத்தன்று சுக்ரப்பட்டி – களத்தூர் சந்திப்பு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்தது. இதனால், திடீரென பிரேக் அடித்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றின் நேற்று வேலுச்சாமி உயிரிழந்தார்.

News December 18, 2025

சிவகங்கை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!