News April 16, 2025
சிவகங்கையில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
Similar News
News November 27, 2025
சிவகங்கை: மஞ்சப்பை விருது; மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டம், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த 3- சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகள் மஞ்சப்பை விருதுகள் பெற வரும் 15.01.2026-க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 27, 2025
சிவகங்கை: காட்டுப்பன்றி கடித்து விவசாயி காயம்

நரிக்குடி அருகே உளுத்திமடை மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி மதியழகன் (25). இவர் தனது வயலுக்கு சென்ற போது அங்கு வந்த காட்டுப்பன்றி அவரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த மதியழகன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காட்டுப் பகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


