News April 5, 2025
சிவகங்கையில் ரூ.25 ஆயிரத்தில் வேலை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை மேலாளார் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 25 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். <
Similar News
News April 8, 2025
சிவகங்கை: பொது விநியோக திட்ட முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (12.04.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
சிவகங்கை : கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

சிவகங்கை மாநில கட்டுப்பாட்டு அறை 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, காவல் கட்டுப்பாட்டு அறை 100, விபத்து உதவி எண் 108, விபத்து அவசர வாகன உதவி 102, குழந்தைகள் பாதுகாப்பு 1098, பேரிடர் கால உதவி 1077, தீ தடுப்பு, பாதுகாப்பு 101 , பாலியல் துன்புறுத்தல் உதவி எண் 1091, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04575 – 240391,240392,240393, வாட்ஸ்ஆப் எண் 8903331077 மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்
News April 8, 2025
சிவகங்கை: உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சாலையை கடக்கும் போதுதேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு பொதுமக்கள், வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தி டிஜிட்டல் அளவீடு செய்யப்பட்டது. தற்போது இரு புறங்களும் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் இருபுறங்களும், டிரம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக வாகனங்களை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.