News April 13, 2025

சிவகங்கையில் முகத்தை சிதைத்துக் கொலை

image

சிவகங்கை இளையான்குடி வேலடிமடம் பஸ் ஸ்டாப்பில் உறங்கி கொண்டிருந்த மகேஸ் என்பவர் முகம் சிதை்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடன் இருந்த நவீன் என்ற இளைஞர் பலத்த வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி தப்பி ஒடி விட்டனர்.கொலை செய்யப்பட்ட மகேஷ் திருவாரூரைச் சேர்ந்த நெல் அருவடை எந்திரத்தின் உரிமையாளர் ஆவார். போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Similar News

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

News April 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

image

சிவகங்கை மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 55 மாற்றுத்திறனாளிகள் தம்பதிகளுக்கு ரூபாய் 21 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத்திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயமும், திருமண உதவித்தொகையாக 25,000 வழங்கப்படும், தகுதியுடையவர்கள் பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கு வரும் 25.04.2025-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரங்களிலுள்ள குறிப்பிட்ட அலகுகளில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!