News March 29, 2025
சிவகங்கையில் போலீசார் குடும்பம் குமுறல்

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை போலீசார் வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றிலும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை ஏற்பட்டு நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
Similar News
News September 17, 2025
சிவகங்கை: அரசு ITI ல் சேர அவகாசம் நீட்டிப்பு..!

சிவகங்கை ஐடிஐயில், காலியாகவுள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற 30.9.2025 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750/- இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, சீருடைகள் காலணிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். SHARE IT
News September 17, 2025
சிவகங்கை: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
சிவகங்கை: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

சிவகங்கை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04575-240426. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.