News August 17, 2024
சிவகங்கையில் போலீசாருக்கு பயண உணவு படி இழுபறி

சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் கிரேடு 2 முதல் தலைமை காவலர் வரை உள்ள போலீசாருக்கு வழங்க வேண்டிய பயண உணவுப்படி, கூடுதல் பணி நாள் சம்பளம் ஆகியன பல மாதங்களாக வழங்கபடவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை சிவகங்கை எஸ்பி காலதாமதமின்றி கிரேடு 2 முதல் தலைமை காவலர்கள் வரை கிடைக்க வேண்டிய படியை வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News October 16, 2025
சிவகங்கையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் நேற்று ஸ்டாலின் என்ற மரைன்பொறியியல் படித்து முடித்த இளைஞர் அவரது தகப்பனார் வைத்திருந்த தற்காலிக பட்டாசு கடையில் வேலை பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது விளம்பர பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவர் தனது வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
தொழிற்பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற் பயிற்சிக்கென, தகுதியான நபர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 18.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நேற்று காலையிலிருந்து பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதில் சிவகங்கை 26.60 மில்லி மீட்டர், காரைக்குடி 50.00மில்லி மீட்டர், காளையார் கோவில் 34.50 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மலை விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமைந்தது என விவசாயிகள் தகவல்.