News March 22, 2025
சிவகங்கையில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி

தேவகோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் வீட்டில் மரத்தை வெட்ட உடப்பன்பட்டியை சேர்ந்த காளிமுத்து வந்தார். மரத்தை வெட்டிய போது மரத்திலிருந்து வெளியேறிய மலை தேனீக்கள் காளிமுத்துவைக் கொட்டின. வீட்டின் வெளியே நின்றிருந்த ராஜாமுகமது அவரது மனைவி, மகன் ஆகியோரை தேனீக்கள் கொட்டியது.இதில் ராஜா முகமது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News April 18, 2025
சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின் தொழில் நுட்ப வல்லுனர் (Electrical Technician) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
News April 18, 2025
சிவகங்கை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
10 வயது சிறுமிக்கு தொந்தரவு – கொத்தனார் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.