News April 25, 2025
சிவகங்கையில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமுகுந்தன் நாகநாதசுவாமி கோயில் ராகு கேது பரிகார ஸ்தலாமாக விளங்குகிறது. இக்கோயிலில் நாகநாதர், செளந்தரநாயகி சன்னதியும், பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் உப சன்னதிகளும் உள்ளன. ராகு கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராகு கேதுவின் தியானம் செய்வது ராகு கேதுவின் அருள் பெற உதவும் என்று கூறப்படுகிறது.
Similar News
News April 11, 2026
சிவகங்கை வரும் முதல்வர் மு.க ஸ்டாலின்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான கே.ஆர் பெரியகருப்பன், தமிழரசி ரவிக்குமார், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் கருணாஸ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
News April 11, 2026
சிவகங்கை: பெண்ணை கொன்று புதைத்த தம்பதி; கோர்ட் அதிரடி.!

இளையான்குடி காமராஜர் நகரில் வசித்து வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி ஆவுடையம்மாள் ஆகியோர், ஏப்.2, 2006. நகைக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த சம்சுநிஷா (55) என்பவரை கொலை செய்து புதைத்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.7,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
News April 10, 2026
சிவகங்கை : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் <


