News April 25, 2025

சிவகங்கையில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமுகுந்தன் நாகநாதசுவாமி கோயில் ராகு கேது பரிகார ஸ்தலாமாக விளங்குகிறது. இக்கோயிலில் நாகநாதர், செளந்தரநாயகி சன்னதியும், பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் உப சன்னதிகளும் உள்ளன. ராகு கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராகு கேதுவின் தியானம் செய்வது ராகு கேதுவின் அருள் பெற உதவும் என்று கூறப்படுகிறது.

Similar News

News November 28, 2025

சிவகங்கைக்கு IMD கொடுத்த அலர்ட்…!

image

வங்கக்கடலில் நிலவி வரும் ‘டித்வா’ புயல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT

News November 28, 2025

சிவகங்கை: இனி Whatsapp மூலம் தீர்வு..!

image

சிவகங்கை மக்களே, உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்கிறது. இந்நிலையில் சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. SHARE IT.

error: Content is protected !!