News April 24, 2025
சிவகங்கையில் இலவச கால்பந்து பயிற்சி

கால்பந்துக் கழகம் சார்பில் 20ஆம் ஆண்டு கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நாளை தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என இரு வேளைகளிலும் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க 8675216868 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்பந்து கழகச் செயலா் சிக்கந்தா் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
காரைக்குடியில் தீபாவளியை முன்னிட்டு அணிவகுப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அக்-18, பாதுகாப்பு அணி வகுப்பு நடந்தது. இதில் சிவகங்கை உதவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் புனியா ஐபிஎஸ், மற்றும் சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மற்றும் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டு அணி வகுப்பை நடத்தினர்.
News October 18, 2025
சிவகங்கை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News October 18, 2025
சிவகங்கை: ஆபத்தில் உடனே உதவி வேண்டுமா… !

சிவகங்கையில் 32 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர். இது தவிர தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் 7 முதல் 8 நிமிடங்களில் ஆம் புலன்ஸ் வந்துவிடும். தீபாவளிக்காக மருத்துவம், போலீஸ், தீயணைப்பு துறை சார்ந்த அழைப்பிற்கு 108 ஐ அழைத்தால் உதவிகள் தேடி வரும் என தெரிவித்துள்ளனர்.