News April 16, 2024
சிவகங்கையில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 2, 2025
சிவகங்கை: கையில் வாளுடன் சுற்றிய மூவர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் காவல் உதவி நிலைய ஆய்வாளர் வைரமணி இன்று 1/11/25 மறவமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு மனோஜ்குமார் மூர்த்தி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய மூன்று பேர் கையில் வாளுடன் சுற்றித்திரிந்தனர். அவர்களில் மூர்த்தி என்பவன் தப்பியோடிய நிலையில் மனோஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News November 1, 2025
சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம் சுற்றுப்பயணம்

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரம் அவர்கள் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்கிறார். காலை 10 மணிக்கு மதுரை திருமண நிகழ்விலும், மதியம் 12.30 மணிக்கு சிவகங்கை சசோதரி மகன் திருமணத்திலும், மதியம் 1.30 மணிக்கு மாணகிரி விஜயத்திலும், மாலை 5 மணிக்கு தேவகோட்டை ஒன்றியம் முப்பையூர் காங்கிரஸ் கட்சி அலுவலக நிகழ்விலும் பங்கேற்கிறார்.
News November 1, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ஐ முன்னிட்டு வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரையும், டிசம்பர் 9ஆம் தேதி பெயர்களை சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல், பிப்ரவரி 7,2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொற்கொடி தெரிவித்துள்ளார்.


