News June 26, 2024

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

image

குன்னம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து(42). இவரது மனைவி பானுமதி (37) ஆகியோர் 2 குழந்தைகளுடன் நேற்று(25.6.24) மாலை சுமார் 6 மணியளவில் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Similar News

News October 21, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்கம்பங்கள் வயல்வெளிகள் (ம) இதர இடங்களில் அருந்து விழுந்து இருந்தால் எச்சரிக்கையுடன் மின்சார துறையின் 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும், மேலும் பேரிடர் காலங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 (அ) 18004254556 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல்.

News October 21, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (21.10.2025) பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

பெரம்பலூர்: ரூ.35,400 சம்பளத்தில்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!