News January 3, 2025
சிலிண்டர் மானியத்தில் 1,90,021 குடும்பங்கள்- முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதலமைச்சரின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.300/- மற்றும் மஞ்சள் நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு ரூ.150/- என ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கான மானியம். 1,90,021 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றார்.
Similar News
News January 8, 2025
புதுவையில் எச்எம்பிவி பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.வி., பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், சுவாசநோய்த் தொற்றுக்களின் தரவுகளை ஆய்வு சுகாதாரத்துறை செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருமல் அல்லது தும்மும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும் என தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
News January 8, 2025
புதுவையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை
புதுச்சேரியில் உள்ள மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 64.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
News January 8, 2025
போஸ்ட் பெய்டு ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம்
புதுவை அரசு மின்துறை சார்பு செயலர் சிவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்மார்ட் மீட்டரை பிரீபெய்டு முறையில் இல்லாமல் தொடக்கத்தில் போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்ப அடிப்படையில் பிரீபெய்டு முறைக்கு மாறுவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.