News April 6, 2025
சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவர்கள் குலுக்கல் முறையில் தோ்வு

சிவகங்கையில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 43 வழித்தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. 6 வழித்தடங்கள் திரும்பப் பெறப்பட்டும், சில வழித்தடங்களில் வழித்தட தொலைவு மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் திருத்தம் செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பித்தவர்களுக்கு வருகிற (ஏப்.8) காலை 11 மணிக்கு குழுக்கள் நடைபெற இருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Similar News
News April 8, 2025
சிவகங்கை: உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சாலையை கடக்கும் போதுதேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு பொதுமக்கள், வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தி டிஜிட்டல் அளவீடு செய்யப்பட்டது. தற்போது இரு புறங்களும் சாலை விரிவாக்கத்திற்கு சாலையின் இருபுறங்களும், டிரம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக வாகனங்களை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
News April 8, 2025
அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல்-23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*
News April 8, 2025
சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.10ல் மதுபான கடைகளுக்கு லீவ்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 10.04.2025 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் அத்தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.