News April 20, 2025

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

image

குன்றத்தூரில், நேற்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் அளித்த 5 அறிக்கைகளில், “காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், ரூ.3.90 கோடியில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க நிதியுதவி ரூ.1-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

Similar News

News November 1, 2025

காஞ்சிபுரம்: மெட்ரோவில் சூப்பர் வேலை; ரூ.30,000 சம்பளம்!

image

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு டிப்ளமோ, BE படித்த 18-33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். மாதம் ரூ.27,000- 30,000 சம்பளம் வழங்கப்படும். சென்னையில்<> நவ.4,5,6,7<<>> ஆகிய தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. ஷேர்!

News November 1, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்டோபர். 31) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

காஞ்சிபுரத்தின் பழமையான கோயில் இதுதான்!

image

காஞ்சிபுரத்தின் தேவார வைப்புத்தலமாகுமாக கருதப்படும் “கைலாசநாதர் கோயில்”, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மற்றும் பாரம்பரிய திராவிடக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது கி.பி. 700-ல் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது காஞ்சிபுரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

error: Content is protected !!